சிலாங்கூரில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க MetaSEL ஒருங்கிணைந்த மையம்

24 அக்டோபர் 2026, 7:00 AM
சிலாங்கூரில் புத்தாக்கத்தை  ஊக்குவிக்க  MetaSEL  ஒருங்கிணைந்த மையம்

சுபாங் ஜெயா, அக் 24: பொதுச் சேவைத் துறையில் புத்தாக்க நிர்வாகம் மற்றும் தரவுப் பகிர்வை ஆதரிக்கும் ஓர் ஒருங்கிணைந்த மையமாக 'சிலாங்கூர் மெட்டாமார்போசிஸ்' (MetaSEL ) உருவெடுத்துள்ளது என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிக்கல்களைக் கண்டறிவது, புதிய யோசனைகளை உருவாக்குவது, தீர்வுகளைக் காண்பது மற்றும் அவற்றைச் செயல்படுத்துவது வரை புதுமைக்கான அனைத்து செயல்முறைகளையும் இந்த மையம் உள்ளடக்கியுள்ளது.

இது மாநிலத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

MetaSEL பாராட்டு விழாவில் உரையாற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

"MetaSEL மையம் என்பது வெறும் பெயரோ அல்லது ஒரு தளமோ மட்டுமல்ல; அது நமது பணி முறையை மாற்றியமைக்கவும், கற்றுக்கொள்ளவும் மற்றும் மேம்படுத்திக் கொள்ளவும் சிலாங்கூர் மாநில அரசு தயாராக இருப்பதன் அடையாளமாகும். இந்த மாற்றம் உண்மையான செயல்பாடுகள், நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் வெளிப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

நேற்றிரவு, ஷா ஆலாம் கிளென்மேரியில் உள்ள ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில புத்தாக்க விருது விழாவின் போது இடம்பெற்ற MetaSEL பாராட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட MetaSEL மையம், சிலாங்கூரின் புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒரே தளத்தில் இணைக்கிறது. இது மலேசியாவிலும் இவ்வட்டாரத்திலும் சிலாங்கூர் மாநிலத்தை ஒரு முக்கிய புத்தாக்க மையமாக மாற்றுவதற்கான போட்டித்தன்மையை அதிகரித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.