நாட்டின் முதல் முன்மாதிரி நீர் பல்கலைகழகத் திட்டத்தை சிலாங்கூர் அறிமுகம் செய்தது

20 அக்டோபர் 2026, 9:19 AM
நாட்டின் முதல் முன்மாதிரி நீர் பல்கலைகழகத் திட்டத்தை சிலாங்கூர் அறிமுகம் செய்தது
நாட்டின் முதல் முன்மாதிரி நீர் பல்கலைகழகத் திட்டத்தை சிலாங்கூர் அறிமுகம் செய்தது
நாட்டின் முதல் முன்மாதிரி நீர் பல்கலைகழகத் திட்டத்தை சிலாங்கூர் அறிமுகம் செய்தது

ஷா ஆலாம், அக் 20 : சிலாங்கூர் அரசாங்கம், சிலாங்கூர் நீர் நிறுவனத்தின்(Air Selangor) ஒத்துழைப்போடு, மலேசியாவின் முதலாவது முன்மாதிரி "நீர் பல்கலைக்கழகத்" திட்டத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டின் நீர் விநியோகத் துறையில் திறமையான ஆட்பலத்தை உருவாக்குவதற்காக அந்த முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பல்கலைக்கழகம் (Unisel) மற்றும் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த முன்மாதிரி பல்கலைக்கழகத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி

இந்த முயற்சி, திறன் மேம்பாடு, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் அதிக போட்டியாற்றல் மிக்க தொழிலாளர்களை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பலனாக, தற்போது சிலாங்கூர் நீர் நிறுவனத்தின் 138 ஊழியர்கள் Unisel மூலமாகவும், 1,500 பங்கேற்பாளர்கள் STDC மூலமாகவும் மலேசிய திறன் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் நீர் நிறுவனம், சிலாங்கூர் பல்கலைக்கழகம்,சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர்அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக அந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் நீர் நிறுவன ஊழியர்கள் 138 பேருக்கு நீர் விநியோக நிர்வகிப்பு தொழில்நுட்பத்திற்கான தொழில்முறை சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

நீர் விநியோக நிர்வகிப்பு தொழில்நுட்பத்திற்கான தொழில்முறை சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட பங்கேற்பாளர்கள்

"அவர்கள் வெறும் சான்றிதழை மட்டும் பெறவில்லை, மாறாக களப்பணி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முறையான கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர். இது சிறப்பாகச் செயல்பட்டால், டிப்ளோமா, இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி (PhD) வரையிலான படிப்புகளை எங்களால் வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.

இதனிடையே, வகுப்பறையில் கற்றதை நீர் விநியோகத் துறையின் உண்மையான பணி அனுபவத்துடன் இணைப்பதே இந்த நீர் பல்கலைக்கழக முன்மாதிரியின் நோக்கம் என சிலாங்கூர் நீர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சஃபியான் கசாலி தெரிவித்தார்.

சிலாங்கூர் நீர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சஃபியான் கசாலி

இதில் சிலாங்கூர் நீர் நிறுவனம் நேரடி களப்பயிற்சியையும், Unisel பல்கலைக்கழகம், கல்வி சார்ந்த நிபுணத்துவத்தையும், STDC மையம், தொழில்நுட்ப மற்றும் நடைமுறைத் திறன் பயிற்சியையும் வழங்கும் என்று அவர் விளக்கினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.