மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு: சிலாங்கூர் அரசு தீவிரம், தனியார் நிறுவனங்களின் ஆதரவு அதிகரிப்பு

22 அக்டோபர் 2026, 12:48 AM
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு: சிலாங்கூர் அரசு தீவிரம், தனியார் நிறுவனங்களின் ஆதரவு அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு: சிலாங்கூர் அரசு தீவிரம், தனியார் நிறுவனங்களின் ஆதரவு அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு: சிலாங்கூர் அரசு தீவிரம், தனியார் நிறுவனங்களின் ஆதரவு அதிகரிப்பு

கோலாலம்பூர்,அக் 22: சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வருமானத்தைப் பெருக்கி, சுயசார்புடன் வாழ்வதற்கு உதவும் வகையில், அதிகளவிலான தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தத் தரப்பினர் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய முயற்சிகள் மிக அவசியம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"மாற்றுத்திறனாளிகளுக்குப் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கி வருவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உடல் ரீதியான சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் வருமானம் ஈட்டி தங்களின் வாழ்க்கையைத் தொடர இது வழிவகுக்கிறது," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய விருது வழங்கும் விழாவில்', பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தலைவர் டத்தோ முகமட் யாசிட் சைரியிடம் ஊராட்சிக்கான விருதை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்குகிறார். படம்: மீடியா சிலாங்கூர்

நேற்று இரவு கிள்ளான், விண்டாம் அக்மார் விடுதியில் நடைபெற்ற '2026 சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய விருது வழங்கும் விழாவில்' உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்களின் அமோக வரவேற்பு மூலம் இந்த நேர்மறையான மாற்றத்தைக் காண முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தரப்பினரை மேம்படுத்தும் முயற்சிகள் வெறும் நலத்திட்ட உதவிகளை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. மாறாக, அவர்கள் வேலைவாய்ப்புச் சந்தையிலும் சமூக வாழ்விலும் இணைவதற்கான கொள்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆதரவு தேவை என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய விருது வழங்கும் விழாவில்' விருது பெற்றவர்களுடன் சமூக நலத்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி (நடுவில் அமர்ந்திருப்பவர்). படம்: மீடியா சிலாங்கூர்

"சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் நடவடிக்கை குழு (MTOS) உருவாக்கப்பட்டிருப்பது வெறும் அனுதாபத்திற்கோ அல்லது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கோ மட்டுமானது அல்ல; இது எங்களின் கடப்பாட்டினைக் காட்டுகிறது.

அரசு நிறுவனங்கள் மூலம் இவர்களுக்குத் தகுந்த ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகள் உள்ளிட்ட மாநிலக் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்," என்றார்.

மேலும், MTOS குழு, மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கொள்கைகளையும் ஆராய்ந்து, திட்டங்களை இன்னும் திட்டமிட்டபடியும் திறம்படவும் செயல்படுத்துவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பொது வசதிகள், நடமாட்ட வசதிகள் , மனிதவள மேம்பாடு மற்றும் விளையாட்டுத் திட்டங்களை வழங்குவதில் ஊராட்சி மன்ற அதிகாரிகளும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை அமிருடின் திட்டவட்டமாகக் கூறினார்.

உடல் திறன்களைப் பொருட்படுத்தாமல், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றத்தின் பலன்களை அனுபவிப்பதை உறுதி செய்யும் ஒரு மாநிலமாக சிலாங்கூர் திகழ இந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.