கோம்பாக், அக் 24: கோம்பாக்கில் உள்ள டேசா அமான் புரி (Desa Aman Puri) அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுக்குக் கீழே, பெட்டி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை டேசா சாத்து (Desa Satu) அடுக்குமாடி குடியிருப்பின் ப்ளோக் ஒன்றில் (Blok 1), 35 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவரால் இந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று முன் தினம் காலை 9.14 மணியளவில் தங்களுக்கு இச்சம்பவம் குறித்த புகார் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத நபரால் அக்குழந்தை அங்கு கைவிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தற்போது அந்த ஆண் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், மருத்துவக் கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் குற்றவியல் சட்டத்தின் 317-வது பிரிவின் கீழ் (குழந்தையைக் கைவிடுதல்) விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்களோ து சாட்சிகளோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ஹிஷாம் முகமட் ரஹ்மானை 010-947 5532 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.







