சரவாக் மாநிலச் சட்டமன்றம் அக்டோபர் 26-ஆம் தேதி கலைக்கப்படும்

23 அக்டோபர் 2026, 8:28 AM
சரவாக் மாநிலச் சட்டமன்றம் அக்டோபர் 26-ஆம் தேதி கலைக்கப்படும்

ஷா ஆலாம், அக்.23 — சரவாக்கின் 13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், அம்மாநிலச் சட்டமன்றம் எதிர்வரும் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படவுள்ளதாக சரவாக் மாநிலப் பிரதமர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி அபாங் ஓபெங் அறிவித்துள்ளார்.

சரவாக் மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜஃபாரின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்..

எனினும், தேர்தல் நடைபெறும் தேதி உள்ளிட்ட அடுத்தகட்ட விவரங்கள் தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் நடைமுறைகளுக்கு ஏற்ப வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற சரவாக் மாநிலத்தின் 12ஆவது மாநிலத் தேர்தலில், சரவாக் கட்சிகளின் கூட்டணியான கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

அந்தத் தேர்தலில் போட்டியிடப்பட்ட மொத்தம் 82 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில், GPS கூட்டணி 76 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதேவேளை, சரவாக் ஐக்கியக் கட்சி (PSB) நான்கு தொகுதிகளிலும், ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த வெற்றியின் மூலம், அபாங் ஜொஹாரி தலைமையிலான GPS கூட்டணி சரவாக் மாநிலத்தில் தனது ஆட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.