டிசம்பரில் சரவாக் மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம்

17 அக்டோபர் 2026, 11:04 AM
டிசம்பரில் சரவாக்  மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம்

கூச்சிங், அக் 17 - சரவாக் மாநில சட்டமன்றத்தின் ஆட்சி அதிகாரக் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைவதற்கு முன்பாக, இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலேயே மாநிலத் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று பெசாக்கா பூமிபுத்ரா பெர்சாத்து (PBB) கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.

சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் சட்டமன்றக் கலைப்புக்கான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கடந்த 2021 டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய தேர்தலிலிருந்து இந்த டிசம்பருடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரீமியர் அபாங் ஜொஹாரி இந்த அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக, சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல் தொழில்துறை , கலை படைப்புக்கான அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

“வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பலரும் விடுமுறையில் இருப்பார்கள் என்பதால் சிலர் பிப்ரவரி வரை காலம் இருப்பதாகக் கூறினாலும், ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதால் டிசம்பரில் தேர்தல் நடக்கவே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று , DayakDaily ஏற்பாடு செய்திருந்த கட்டுரை போட்டியின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யும்போது பண்டிகைக் காலங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

ஜனவரி மாதத்தில் சீனப் புத்தாண்டு வருகிறது. அதற்குப் பிறகு (பிப்ரவரி) ரமலான் மாதம் தொடங்குகிறது. எனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது,” என்று அப்துல் கரீம் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.