ஷா ஆலாம், செப். 23 — இன்று காலை 9 மணியளவில் சிலாங்கூரில் பந்திங் பகுதியில் மட்டுமே நல்ல காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையத் தகவலின்படி, நாடு முழுவதும் எட்டு கண்காணிப்பு நிலையங்களில் நல்ல காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
அவற்றில் பந்திங் பகுதியில் காற்று மாசு குறியீடு (API) 50 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கோலா திரங்கானு 45, பெசுட் 41, கங்கார் 39, இந்தரா மக்கோத்தா மற்றும் குவாந்தான் 38, தெமர்லோ 33, ஜெராந்துட் 32, லங்காவி 31 என பதிவாகியுள்ளன.
இதனிடையே, சிலாங்கூரின் மேலும் ஐந்து பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் நீடித்தது. ஜோஹான் செத்தியாவில் 71 , ஷா ஆலாம் 69, பெட்டாலிங் ஜெயா 67, கோலா சிலாங்கூர் 57, கிள்ளான் 55 ஆக API பதிவாகின.
இதனிடையே, நாடு தழுவிய நிலையில் சரவாக்கில் 13 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.







