சிலாங்கூர் நகரங்களில் காற்று மாசு தொடர்ந்து நீடிப்பு

23 அக்டோபர் 2026, 7:25 AM
சிலாங்கூர் நகரங்களில் காற்று மாசு தொடர்ந்து நீடிப்பு

ஷா ஆலாம், அக்.23 — மலேசியாவில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, காற்று மாசுக் குறியீட்டில் நெகிரி செம்பிலானில் அமைந்துள்ள சிரம்பான் முதலிடத்தில் உள்ள நிலையில், சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா மற்றும் கிள்ளான் பகுதிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

காற்று மாசுக் குறியீடு (API) சிரம்பானில் 158 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், ஜோஹான் செத்தியாவில் 157 ஆகவும், கிள்ளானில் 156 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த மூன்று பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூரில் மேலும் மூன்று இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது. பெட்டாலிங் ஜெயாவில் காற்று மாசுக் குறியீடு 153 ஆகவும், ஷா ஆலாமில் 152 ஆகவும், பந்திங்கில் 145 ஆகவும் காணப்படுகிறது.

எனினும், கோலா சிலாங்கூர் பகுதியில் இந்தக் குறியீடு 78 ஆகப் பதிவாகியுள்ளதால், அங்கு காற்றின் தரம் மிதமான நிலையில் உள்ளது.

இதற்கிடையில், புத்ராஜெயாவில் காற்று மாசுக் குறியீடு 125 ஆகப் பதிவாகியுள்ளது. கோலாலம்பூரின் பத்து மூடா பகுதியில் இது 155 ஆக இருக்கும் நிலையில், செராஸ் பகுதியில் 98 ஆகப் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 16 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது. அதேவேளை, 49 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் காணப்படுகிறது. மூன்று பகுதிகளில் மட்டுமே நல்ல காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.