நீர் வளங்களைக் கண்காணிக்க அதிகாரிகளின் “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்படவுள்ள ‘FOR’ அமைப்பு

23 அக்டோபர் 2026, 1:00 AM
நீர் வளங்களைக் கண்காணிக்க அதிகாரிகளின் “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்படவுள்ள ‘FOR’ அமைப்பு

ஷா ஆலாம், அக்.23 – சிலாங்கூரில் ஆறுகளின் தூய்மையையும் நீர்வளங்களின் நிலைத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், ‘ஆறுகளின் நண்பர்கள்’ (Friends of Rivers – FOR) சமூகத்தினர் ஆற்றுப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் அதிகாரிகளின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவார்கள் என மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸாம் ஹாஷிம்

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆறுகளின் நண்பர்கள் பயிலரங்கில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் நீர் நிர்வாக ஆணையமான LUAS ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிலரங்கு, ஆறுகளைப் பாதுகாப்பதில் சமூகத்தினரின் பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் நீர்வளப் பாதுகாப்பு முயற்சிகளில் அதிகமான உள்ளூர் சமூகத்தினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் இஷாம் ஹாஷிம் வலியுறுத்தினார்.

ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தன்னார்வ நடவடிக்கைகளில் பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

ஆறுகளைப் பாதுகாக்கும் திட்டங்களைத் திட்டமிடவும் கண்காணிக்கவும் அமைக்கப்பட்ட ஆற்றுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்ட ‘ஆறுகளின் நண்பர்கள்’ திட்டம், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, சிலாங்கூர் முழுவதும் 58 சமூகக் குழுக்கள் செயற்பாட்டுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இக்குழுக்களின் மூலம் இதுவரை குறைந்தது 555 ஆற்றுப் பாதுகாப்பு நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 138 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சமூகக் குழுக்களின் செயல்பாடுகளைப் பதிவு செய்து கண்காணிப்பதற்காக LUAS உருவாக்கிய ‘ஆறுகளின் நண்பர்கள்’ செயலி, 2022ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.