பிரான்ஸில் போராட்டங்கள்: அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்தல்

18 அக்டோபர் 2026, 9:12 AM
பிரான்ஸில் போராட்டங்கள்: அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்தல்

கோலாலம்பூர், அக். 18 – பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸில் தங்கியுள்ள மலேசியர்கள் அங்கு நிலவும் தற்போதைய சூழ்நிலை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டது.

இதுவரை பிரான்ஸின் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களால் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகவோ, அவற்றில் தொடர்புபட்டதாகவோ தகவல் கிடைக்கவில்லை என விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

மலேசியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும், நிலவரம் குறித்த அண்மைய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பாரிஸில் உள்ள மலேசியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

இதனிடையே, பிரான்ஸில் வசிக்கும் மலேசியர்கள் தங்களது தற்போதைய விவரங்கள் பாரிஸில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள், அவசரக் காலங்களில் தொடர்புகொள்வதையும் தேவையான உதவிகளை வழங்குவதையும் எளிதாக்க வெளியுறவு அமைச்சின் மின்-தூதரக (e-Konsular) இணையத் தளமான https://ekonsular.kln.gov.my வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பிரான்ஸுக்குச் செல்வதற்கு மலேசியர்களுக்கு எவ்விதப் பயணத் தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள் தங்களது பயண விவரங்களை e-Konsular தளத்தில் பதிவு செய்துகொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரக் காலங்களில் அல்லது உடனடி தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள், பாரிஸில் உள்ள மலேசியத் தூதரகத்தை +33145531185 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அலுவலக நேரத்திற்குப் பின்னர் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு +33632446571 என்ற எண்ணையும், par.consular@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.