பிரான்ஸ், ஸ்பெயினில் மிரட்டும் காட்டுத்தீ; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

25 ஜூலை 2026, 9:39 AM
பிரான்ஸ், ஸ்பெயினில் மிரட்டும் காட்டுத்தீ; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

சனிக்கிழமை, ஜூலை 25 : பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதை அடுத்து சுமார் இரண்டு லட்சத்து 80,000 பேர் தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாட்ரிட் மற்றும் போர்டோ (Madrid & Bordeaux) அருகே ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் இப்பேரிடரைக் கட்டுக்குள் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைக் கோரியுள்ளன.

ஸ்பெயினில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டியுள்ளது.

தலைநகர் மட்ரிட் (Madrid) அருகே எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது "தீயணைப்பு வீரர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று அந்நாட்டு உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீக்கு, மே முதல் அடுத்தடுத்து ஏற்பட்ட வெப்ப அலைகளால் காடுகள் முற்றிலும் காய்ந்து போயிருந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய வறட்சி நிலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன என்றும், வானிலை அவசரநிலைகள் மிகவும் தீவிரமடைகின்றன என்றும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.