பிரான்ஸில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனை: சிலர் பணிநீக்கம்!

23 ஜூலை 2026, 9:13 AM
பிரான்ஸில் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனை: சிலர் பணிநீக்கம்!

பாரிஸ், ஜூலை 23 — அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட புதிய போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தில், போதைப்பொருள் பயன்பாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் அடுத்து, பிரான்ஸ் அரசின் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், முக்கியமாகப் பாதுகாப்பு காரணங்களுக்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல ஊழியர்கள், நாட்டின் மிகவும் உணர்திறன் வாய்ந்த ரகசியத் தகவல்களைக் கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜூன் மாத மத்தியில், அரசாங்க உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு எச்சரிக்கையின்றி போதைப்பொருள் பரிசோதனை செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.

இந்தப் பரிசோதனையில் நேர்மறை முடிவு (positive) வரும் நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உட்பட தகுந்த நடவடிக்கைகளைத் தீர்மானிக்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பிரச்சாரத்தை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் எந்தவிதக் குறையுமின்றி நேர்மையாக இருந்தால் மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே நம்பிக்கை ஏற்படும் என அவர் கூறினார்.

மேலும், இந்தச் சோதனைகள் ஒருமுறை மட்டும் நடத்தப்படாமல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.