ஷா ஆலாம், அக். 18 – சிலாங்கூரில் இன்று காலை 10 மணி நிலவரப்படி, கோலா சிலாங்கூர் கண்காணிப்பு நிலையம் மட்டுமே மிதமான காற்றுத் தரத்துடன் 84 என காற்று மாசுக் குறியீட்டைப் (API) பதிவு செய்துள்ளது.
காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், சிலாங்கூரில் உள்ள ஐந்து கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
ஜோஹான் செத்தியாவில் 164, ஷா ஆலாமில் 160, கிள்ளானில் 157, பெட்டாலிங் ஜெயாவில் 156, பந்திங்கில் 155 என API பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், புத்ராஜெயாவில் 158, செராஸில் 156, பத்து மூடாவில் 155 என காற்று மாசுக் குறியீடுகள் பதிவாகியுள்ளன.
பினாங்கின் பாலிக் புலாவ் பகுதியில் மிகக் குறைந்த API அளவாக 42 பதிவாகியுள்ளது. மேலும், சரவாக்கின் லிம்பாங் பகுதியில் 48 பதிவாகியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 26 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. மேலும், 40 நிலையங்கள் மிதமான காற்றுத் தரத்தையும், இரண்டு நிலையங்கள் நல்ல காற்றுத் தரத்தையும் பதிவு செய்துள்ளன.






