அதிகாலை சோதனையில் புடு பொழுதுபோக்கு மையத்தில் 190 வெளிநாட்டினர் கைது

17 அக்டோபர் 2026, 4:52 AM
அதிகாலை சோதனையில் புடு பொழுதுபோக்கு மையத்தில் 190 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், அக் 17 - பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவிப்பதாகப் பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, இன்று அதிகாலை கோலாலம்பூர், புடுவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 190 வெளிநாட்டினரும் இரு உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த பொழுதுபோக்கு மையம் பள்ளிவாசலில் இருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில் இயங்கி வந்ததாகக் குடிநுழைவு துறையின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களை உபசரிக்க இந்த மையத்தில் பல அறைகள் இருந்ததாகவும், ஒவ்வொரு அறையிலும் 50 முதல் 60 பேர் வரை நெருக்கியடித்தபடி இருந்ததாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 41 வயதுக்குட்பட்ட 99 ஆண்களும் 91 பெண்களும் அடங்குவர். அவர்களில் 188 பேர் இந்தோனேசியர்கள் ஆவர். எஞ்சிய இருவர் வங்காளதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட இரு உள்ளூர் ஆடவர்களும் அந்த மையத்தின் முதலாளி மற்றும் காப்பாளர் என நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தவர்கள் என்பதோடு முறையான பயண ஆவணங்களைக் கொண்டிருக்காதவர்கள் ஆவர் .

அங்கு ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டதால், அந்த மையத்தில் ஒழுங்கீன செயல்கள் நடந்திருக்கலாம் என்று பஸ்ரி சந்தேகம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவணப்படுத்துதல் மற்றும் விசாரணைக்காகக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.