சிலாங்கூரின் 5 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

17 அக்டோபர் 2026, 2:57 AM
சிலாங்கூரின் 5 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

ஷா ஆலம், அக் 17 — இன்று காலை சிலாங்கூரில் உள்ள ஐந்து பகுதிகள் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

காலை 10 மணி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 24 கண்காணிப்பு நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீட்டைப் (API) பதிவு செய்தன.

ஷா ஆலாம், கிள்ளான் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய பகுதிகள் 170 என்ற காற்று மாசு குறியீட்டைப் பதிவு செய்தன.

இதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா (169) மற்றும் பந்திங் (153) ஆகிய பகுதிகள் உள்ளன.

இம்மாநிலத்தில் கோலா சிலாங்கூர் மட்டுமே 95 என்ற மிதமான அளவைப் பதிவு செய்துள்ளது.

நாடு தழுவிய அளவில், 24 கண்காணிப்பு நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டு அளவுகளைப் பதிவு செய்துள்ளன.

இதில் ஜொகூரில் உள்ள பாசிர் கூடாங் அதிகபட்சமாக 195 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஜொகூரில் உள்ள லார்க்கின் (176), நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் (174), நிலாய் (173) மற்றும் ஜொகூரில் உள்ள பெங்கேராங் (172) ஆகிய பகுதிகள் உள்ளன.

இதற்கிடையில், 43 கண்காணிப்பு நிலையங்கள் மிதமான அளவுகளைப் பதிவு செய்துள்ளன. இவை பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் கிழக்குக் கரைப் பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக்கிலும் அமைந்துள்ளன.

சரவாக்கில் உள்ள காபிட் (Kapit) மட்டுமே 48 என்ற குறியீட்டுடன் நல்ல காற்றுத் தரத்தைப் பதிவு செய்த ஒரே ஒரு நிலையமாகும்.

காற்று மாசு குறியீட்டு நிர்வாக முறையின்(APIMS) வலைத் தளத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.