சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலை

16 அக்டோபர் 2026, 3:45 PM
சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலை

ஷா ஆலாம், அக்.16 – கோலா சிலாங்கூரில் காற்று மாசுக் குறியீடு (API) மீண்டும் மிதமான நிலைக்கு திரும்பியுள்ளது. இன்று இரவு 11 மணி நிலவரப்படி அங்கு API அளவு 90 ஆகப் பதிவாகியுள்ளது.

இருப்பினும், சிலாங்கூரில் மற்ற ஐந்து இடங்களில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது.

ஜோஹான் செத்தியாவில் அதிகபட்சமாக 175 என்ற API அளவு பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிள்ளானில் 172, பெட்டாலிங் ஜெயாவில் 167, ஷா ஆலாமில் 166, பந்திங்கில் 152 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மலேசியாவில் அதிக காற்று மாசுக் குறியீட்டைப் பதிவு செய்த முதல் மூன்று இடங்களும் ஜோகூரில் அமைந்துள்ளன.

அங்கு பாசிர் கூடாங் பகுதியில் 196 என்ற API அளவு பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து லார்கினில் 187, பெங்கராங்கில் 177 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இன்று இரவு 11 மணி நிலவரப்படி, 26 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. மேலும், 41 நிலையங்களில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சரவாக் மாநிலத்தின் கபிட் பகுதியில் மட்டுமே காற்றின் தரம் நல்ல நிலையில் காணப்பட்டது. அங்கு API அளவு 47 ஆகப் பதிவாகியுள்ளது.

புகைமூட்டம் தாக்கம் தொடர்ந்து காணப்படும் நிலையில், பொதுமக்கள் காற்றின் தரம் குறித்த அண்மைய தகவல்களைக் கண்காணித்து, குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதய அல்லது சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.