சிலாங்கூரில் காற்றுத் தரம் பாதிப்பு; ஆறு இடங்களில் ஆரோக்கியமற்ற நிலை

16 அக்டோபர் 2026, 2:30 AM
சிலாங்கூரில் காற்றுத் தரம் பாதிப்பு; ஆறு இடங்களில் ஆரோக்கியமற்ற நிலை

ஷா ஆலாம், அக்.16 – புகைமூட்டத்தால் சிலாங்கூரில் உள்ள ஆறு இடங்களில் இன்று காலை 9 மணி நிலவரப்படி காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

காற்று மாசுக் குறியீட்டு நிர்வாக அமைப்பான APIMS இணையத் தளத்தின் தரவுகளின்படி, ஜோஹான் செத்தியா பகுதியில் காற்று மாசுக் குறியீடு (API) 185 ஆகப் பதிவாகி, மாநிலத்திலேயே அதிக மாசு அடைந்த பகுதியாகத் திகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து கிள்ளானில் 181, பெட்டாலிங் ஜெயாவில் 173, ஷா ஆலாமில் 171, பந்திங்கில் 169, கோலா சிலாங்கூரில் 155 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், நாட்டில் ஜோகூர், பாசிர் கூடாங் பகுதியில் மட்டுமே காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. அங்கு காற்று மாசுக் குறியீடு 207 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள 37 கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளதாக APIMS தரவுகள் தெரிவிக்கின்றன.

சிலாங்கூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் காற்றுத் தர நிலவரங்களைக் கண்காணித்து, அதற்கேற்ப தங்களது வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுவது அவசியமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.