சிலாங்கூரில் காற்றுத் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் நீடிப்பு

16 அக்டோபர் 2026, 7:56 AM
சிலாங்கூரில் காற்றுத் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் நீடிப்பு

ஷா ஆலாம், அக்.16 – சிலாங்கூரில் உள்ள ஆறு இடங்களில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி காற்று மாசுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

காற்று மாசுக் குறியீட்டு நிர்வாக அமைப்பான APIMS இணையத் தளத்தின் தரவுகளின்படி, ஜோஹான் செத்தியாவில் காற்று மாசுக் குறியீடு 186 ஆகப் பதிவாகி, சிலாங்கூர் மாநிலத்திலேயே அதிக மாசு அடைந்த பகுதியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிள்ளானில் 180, பெட்டாலிங் ஜெயாவில் 174, ஷா ஆலாமில் 170, பந்திங்கில் 166, கோலா சிலாங்கூரில் 153 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மலேசியாவில் அதிகபட்ச காற்று மாசுக் குறியீடு ஜோகூர் பாசிர் கூடாங் பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு API அளவு 207 ஆக இருப்பதால், காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ள ஒரே பகுதியாகப் பாசிர் கூடாங் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, மலேசியாவின் 30 பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. மேலும், 37 கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்றுத் தரம் காணப்படுகிறது.

அதேவேளையில், நாடு முழுவதும் எந்தவொரு பகுதியிலும் காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவாகவில்லை என APIMS தரவுகள் தெரிவிக்கின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.