சிலாங்கூரில் மோசமான காற்று மாசு : 2 இடங்களில் குறியீடு 200 -ஐ நெருங்கியது

15 அக்டோபர் 2026, 2:01 AM
சிலாங்கூரில் மோசமான காற்று மாசு : 2 இடங்களில் குறியீடு 200 -ஐ நெருங்கியது
சிலாங்கூரில் மோசமான காற்று மாசு : 2 இடங்களில் குறியீடு 200 -ஐ நெருங்கியது

ஷா ஆலாம், அக் 15 - சிலாங்கூரில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் வேளையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி இரு இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) 200-ஐ நெருங்கியது.

மேலும் நான்கு இடங்களில் தொடர்ந்து ஆரோக்கியமற்ற அளவு பதிவாகியது.

கிள்ளான் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய பகுதிகள் அதிகபட்சமாக 192 குறியீட்டைப் பதிவு செய்தன.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலம் (180), பந்திங் (170), பெட்டாலிங் ஜெயா (169) மற்றும் கோலா சிலாங்கூர் (161) ஆகிய இடங்கள் உள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 34 பகுதிகளில் ஆரோக்கியமற்ற API நிலைகளும், மற்றுமொரு 34 பகுதிகளில் மிதமான நிலைகளும் பதிவாகின.

மாநில வாரியாக ஆரோக்கியமற்ற API அளவுகள்:

• ஜொகூர்: லார்கின் (188), பத்து பஹாட் (181), பாசிர் கூடாங் (181), தங்காங் (176), பெங்கராங் (171), குளுவாங் (164), கோத்தா திங்கி (162) மற்றும் செகாமட் (161).

• நெகிரி செம்பிலான்: நீலாய் (185), சிரம்பான் (182) மற்றும் போர்ட் டிக்சன் (176).

• மலாக்கா: புக்கிட் ரம்பாய் (185), மலாக்கா மாநகரம் (178) மற்றும் அலோர் காஜா (177).

• கூட்டரசு பிரதேம்: புத்ராஜெயா (176), செராஸ் (172) மற்றும் பத்து மூடா (162).

• பேராக்: தஞ்சோங் மாலிம் (167), ஸ்ரீ மஞ்சோங் (166) மற்றும் பெகோ, ஈப்போ (102).

• பகாங்: தெமர்லோ (156), ஜெராண்டுட் (152), இந்திரா மக்கோத்தா (152) மற்றும் ரொம்பின் (151).

• சரவாக்: சமரஹான் (153) மற்றும் செரியான் (120).

• பினாங்கு: செபராங் பிறை (144).

• திராங்கானு: கெமாமான் (105).

சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு நிர்வாக முறையின்(APIMS) இணைய தளத்தில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.