1எம்.டி.பி வழக்கு: தண்டனையை ஒத்தி வைக்கும் நஜீப்பின் மனு தள்ளுபடி

14 அக்டோபர் 2026, 11:42 AM
1எம்.டி.பி வழக்கு: தண்டனையை ஒத்தி வைக்கும் நஜீப்பின் மனு தள்ளுபடி

கோலாலம்பூர், அக் 14 - 1எம்.டி.பி வழக்கில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், 1,140 கோடி ரிங்கிட் அபராதத்தையும் ஒத்தி வைக்கும் , முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பின் விண்ணப்பத்தை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவ்விரு தண்டனைகளையும் ஒத்தி வைப்பதற்கான அசாதரண சூழ்நிலைக்கான சோதனையை அவர் பூர்த்தி செய்யத் தவறியிருப்பதாக, நீதிபதி நூர் ருவேனா மொஹ்ட் நூர்டின் தெரிவித்தார்.

மக்கள் கவனத்தைப் பெற்ற குற்றத்தின் கடுமையையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

அத்துடன், நஜீப்பின் உடல் நலப் பிரச்சனை, அசாதரண சூழ்நிலைக்கான சோதனையைப் பூர்த்தி செய்யவில்லை.

மாறாக , நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவரது மருத்துவ அறிக்கைகள் , நஜீப்பின் மருத்துவ தேவையை அரசாங்கம், மருத்துவமனை , மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் நன்கு கவனித்துள்ளனர் என்பதையே காட்டுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்த முடிவை அடுத்து, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் புதிய விண்ணப்பத்தை சமர்பிக்கப் போவதாக, நஜீப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மட் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.

நஜீப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மட் ஷாஃபி அப்துல்லா. படம் - பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.