கிள்ளானில் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் சம்பவங்கள் குறைந்தன; 909 அபராதங்கள் விதிப்பு

13 அக்டோபர் 2026, 5:33 AM
கிள்ளானில் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் சம்பவங்கள் குறைந்தன; 909 அபராதங்கள் விதிப்பு

ஷா ஆலாம், அக். 13 – கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (MBDK) கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) வாயிலாக, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டிய 103 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 109 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக MBDK தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் 30ஆம் தேதி வரையில், 2007ஆம் ஆண்டின் குப்பைகளைச் சேகரித்தல், கொட்டுதல் மற்றும் அகற்றுதல் தொடர்பான துணைச் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 909 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவற்றில் 576 அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் வாயிலாக 4,128 காணொளிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டிய எட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அவற்றில் இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஆறு சம்பவங்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக MBDK வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு உதவ சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் மலேசியக் காவல்துறை (PDRM) ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்று MBDK திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.