சீரான குப்பை சேகரிப்பால் மேரு பாரம்பரியக் கிராமங்களில் தூய்மை மேம்பாடு

26 செப்டெம்பர் 2026, 4:53 AM
சீரான குப்பை சேகரிப்பால் மேரு பாரம்பரியக் கிராமங்களில் தூய்மை மேம்பாடு

கிள்ளான், செப்.26 – குப்பை சேகரிப்பு நடவடிக்கைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேருவைச் சுற்றியுள்ள பாரம்பரியக் கிராமங்களில் தூய்மை நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது.

இதனால், குப்பை தொடர்பான குடியிருப்பாளர்களின் புகார்களும் குறைந்துள்ளன என சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

ஜாலான் காமிஸ் உட்பட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், அப்பகுதிகளின் தூய்மை நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருப்பதாக டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.

இதனிடையே, மேரு பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள்ளப்படும்.

மேலும், வீட்டு உபயோகக் குப்பைத் தொட்டிகளை இன்னும் ஏற்பாடு செய்யாத குடியிருப்பாளர்களுடன் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடுமாறு கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு (MBDK) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பைகளை முறையாக அகற்றுவதில் குடியிருப்பாளர்களுக்கும் பொறுப்பு இருப்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

இதன் மூலம் குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைக்கு ஏற்பவும், மிகவும் ஒழுங்கான முறையிலும் அகற்ற முடியும்.

காலப்போக்கில் கிராமங்கள் மேலும் தூய்மையாக மாறுவதற்கு இது உதவும் என்று கள ஆய்வின்போது டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

இதனிடையே, நடப்பு ஆண்டில் குப்பை சேகரிப்பு சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட RM10 மில்லியன் நிதி மேலும் RM5 மில்லியனால் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னர் குப்பை சேகரிப்பு சேவை வரம்புக்குள் இடம்பெறாத பகுதிகளுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்காக கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.

குப்பை சேகரிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சுமார் 54 புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிட்டத்தட்ட 295 புதிய குப்பைத் தொட்டிகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.