செப்பாங், உலு லங்காட் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

12 அக்டோபர் 2026, 8:07 AM
செப்பாங், உலு லங்காட் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், அக். 12 – சிலாங்கூரில் செப்பாங், உலு லங்காட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை எச்சரிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், புத்ராஜெயாவிலும் இதேபோன்ற சீரற்ற வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலானில் ஜெலெபு, சிரம்பான், போர்ட்டிக்சன், ரெம்பாவ் மற்றும் கோலா பிலா ஆகிய பகுதிகளுக்கும், ஜோகூரில் கோத்தா திங்கி, பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராக்கில் உலு பேராக், கோலா கங்சார், கிந்தா மற்றும் செலாமா ஆகிய பகுதிகளிலும், கிளந்தானில் ஜெலி மற்றும் குவா மூசாங் பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானிலையால் திரங்கானுவில் டுங்குன், உலு திரங்கானு மற்றும் கெமாமான் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகாங் மாநிலத்திலும் பெக்கான், லிப்பிஸ், ஜெரான்துட், குவாந்தான், ரவுப், தெமர்லோ, பெந்தோங், மாரான், ரொம்பின் மற்றும் கேமரன் மலைப்பகுதி ஆகியவை இதில் அடங்குகின்றன.

இதற்கிடையில், சரவாக், சபா, லாபுவான் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.