ஷா ஆலாம், அக். 11 — கிளந்தான், குவா மூசாங்கில் இன்று நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் தாயும் அவரது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து மூன்று பெரோடுவா மைவி ரகக் கார்கள் மற்றும் யமஹா மோடினாஸ் ரக மோட்டார் சைக்கிளிகிடையே ஏற்பட்டது.
இன்று மாலை 5.10 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத் தலைவர் மூத்த உதவி தீயணைப்பு அதிகாரி முகமட் அஸ்ருல் இஸாம் சுல்கிஃப்லி தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அவர் கூறினார்.
உயிரிழந்த இருவரைத் தவிர, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







