புகைமூட்டம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன: சுகாதார அமைச்சு

10 அக்டோபர் 2026, 7:12 AM
புகைமூட்டம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன: சுகாதார அமைச்சு

ஷா ஆலம், அக். 10 – நாட்டின் சில பகுதிகளில் நீடித்து வரும் புகைமூட்டதால் மக்களிடையே மேல் சுவாசப் பாதைத் தொற்று மற்றும் கண் உபாதைகள் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

எனினும், தற்போது ஆஸ்துமா பாதிப்புகள் குறைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியது. 535ஆக இருந்த பாதிப்புகள் 462ஆகக் குறைந்துள்ளன. இது 13.64 விழுக்காடு சரிவாகும்.

இதற்கிடையில், தரவுகள் அடிப்படையில் மேல் சுவாசப் பாதைத் தொற்று பாதிப்புகள் 3,509இல் இருந்து 3,875ஆக அதிகரித்துள்ளன. இது 10.43 விழுக்காடு உயர்வாகும்.

கண் உபாதைகளும் தொடர்பில் இதுவரை 102ஆகப் பதிவான பாதிப்புகள் தற்போது 129ஆக உயர்ந்துள்ளன. இது 26.47 விழுக்காடு அதிகரிப்பாகும் என்றது அமைச்சு.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 சுகாதார நிலையங்கள் இந்நோய்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நுரையீரல் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகைமூட்டத்தால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அவற்றை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியது. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், பொருத்தமான முகக்கவசத்தை, குறிப்பாக N95 முகக்கவசத்தை அணியவது அவசியமாகும்.

புகைமூட்டக் காலத்தில் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மேல் தகவல்களைச் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் https://infosihat.moh.gov.my/isu-semasa/51-jerebu.html பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.