புகைமூட்டம் தொடர்பான நோய்கள் குறைந்து வருகின்றன - சுகாதார அமைச்சு

22 செப்டெம்பர் 2026, 10:53 AM
புகைமூட்டம் தொடர்பான நோய்கள் குறைந்து வருகின்றன - சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, செப்.22 — நாட்டில் புகைமூட்டம் தொடர்பான நோய்கள் 37ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் (EW37) குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆஸ்துமா பாதிப்பு சம்பவங்களில் மிகப் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது. EW36இல் 1,117 ஆஸ்துமா சம்பவங்கள் பதிவான நிலையில், EW37இல் அந்த எண்ணிக்கை 722ஆகக் குறைந்துள்ளது.

இதனிடையே, கண் அழற்சி எனப்படும் கான்ஜங்க்டிவிட்டிஸ் பாதிப்புகளும் 32.04 விழுக்காடு குறைந்துள்ளன. EW36இல் 334 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. தற்போது EW37இல் அந்த எண்ணிக்கை 227ஆகக் குறைந்துள்ளது.

மேலும், சுவாசக் குழாய் தொற்று எனப்படும் URTI பாதிப்புகளிலும் சரிவு காணப்பட்டுள்ளது. முந்தைய வாரத்தில் 7,065 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், EW37இல் 5,639 சம்பவங்களாகக் குறைந்துள்ளது.

புகைமூட்டம் தீவிரமடையும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க சுகாதார வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள், முதியவர்கள், நீண்டகால சுவாச நோய்கள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.