லாரி, 11 கார்கள் மோதிய விபத்து: இருவர் கவலைக்கிடம்

9 அக்டோபர் 2026, 11:44 AM
லாரி, 11 கார்கள் மோதிய விபத்து: இருவர் கவலைக்கிடம்

ஷா ஆலாம், அக். 9 – சிலாங்கூர், செக்‌ஷன் யு10, ஜாலான் மொக்தார் தாஹாரியில் உள்ள ஆலாம் புடிமான் போக்குவரத்து விளக்குச் சந்திப்பில், 10 டன் எடை கொண்ட லாரி ஒன்று 11 கார்களுடன் மோதிய விபத்தில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெஸால் அஸ்பார் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பாக இன்று மாலை 4.31 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன், புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியிருந்த நால்வரையும் வெற்றிகரமாக மீட்டனர்.

அவர்கள் சிகிச்சைக்காகப் புஞ்சாக் ஆலாம் பகுதியில் அமைந்துள்ள மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UiTM) அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.