2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகள்

9 அக்டோபர் 2026, 11:05 AM
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகள்

கோலாலம்பூர், அக்.9: 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 2 மடங்காக உயர்த்தி 200 கோடி ரிங்கிட்டாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

அதில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜோகூர், குளுவாங்கில் உள்ள லடாங் பாமோல் தமிழ்ப்பள்ளி முழுமையாகப் புனரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்தியச் சிறுதொழில் முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக தெக்குன் (Tekun) மற்றும் அமானா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia) ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி RM15 கோடியாக உயர்த்தப்படும்.

கூடுதலாக, அடுத்து ஆண்டு மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவிற்கான (மித்ரா) ஒதுக்கீடு 15 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் என பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தில் தொழில்துறை ஆட்டோமேஷன், தொழில்நுட்பம் மற்றும் விமான பராமரிப்பு போன்ற துறைகளில் இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சிகளும் வேலைவாய்ப்புகளும் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.