புத்ராஜெயா, அக். 10 – 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் RM69 பில்லியன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்கும் கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்கவுள்ளது.
பள்ளி ஆரம்ப உதவித் தொகை (BAP), கூடுதல் உணவுத் திட்டம் (RMT), ஆறாம் படிவ மாணவர்கள் மற்றும் சிறப்புக் கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கான (MBPK) உதவித் தொகை ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குவது அமைச்சின் முக்கிய முன்னுரிமைகளில் அடங்கும்.
மேலும், நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுடன் இணைந்து, ஆசிரியர்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்துவது அவசியம் என அமைச்சு சுட்டிக்காட்டியது.
பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளையும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்கான திட்டங்களையும் விரைவுபடுத்துவது முக்கிய அம்சமாகும் இருக்கும்.
அனைத்து வகையான பள்ளிகளையும் பழுதுபார்த்து பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டு, RM1 பில்லியனிலிருந்து RM2 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், தேசியப் பள்ளிகளுக்கு (SK) RM900 மில்லியனும், சீனத் தேசிய வகைப் பள்ளிகளுக்கு (SJKC) RM100 மில்லியனும், தமிழ்த் தேசிய வகைப் பள்ளிகளுக்கு (SJKT) RM50 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.







