மானியங்கள், உதவிகளுக்காக 80 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஒதுக்கீடு

9 அக்டோபர் 2026, 9:20 AM
மானியங்கள், உதவிகளுக்காக 80 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஒதுக்கீடு

ஷா ஆலாம், அக். 9 – மலேசிய மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகளுக்காக அடுத்த ஆண்டு 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கவுள்ளது.

இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டில் எரிபொருள் மானியங்களுக்காக மட்டும் சுமார் 40 பில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சமூக நலத் துறை (JKM) வாயிலாக வழங்கப்படும் உதவிகளுக்காக ஏறக்குறைய 3.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் மின்சாரக் கட்டணப் பாதுகாப்புக்கான மாதாந்திர பயன்பாட்டு வரம்பு 600 கிலோவாட் மணி நேரத்திலிருந்து 800 கிலோவாட் மணி நேரமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்கள் பயனடைந்தனர்.

அதேவேளை, பூடி95 பெட்ரோல் மானிய திட்டத்தின் கீழ் மாதாந்திரத் தகுதி வரம்பு 300 லிட்டராக உயர்த்தப்பட்ட நிலையில் பூடி டீசல் உதவித் திட்டத்தின் மாதாந்திர ஒதுக்கீடும் 400 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.