ஷா ஆலாம், அக். 9 – சும்பாங்கான் துனாய் ரஹ்மா (STR) உதவித் திட்டத்தில் இடம்பெறாத 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள், அடுத்த ஆண்டு 100 ரிங்கிட் சாரா மடாணி உதவித்தொகையை இருமுறை பெறவுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்ட இந்த உதவித் தொகை, அடுத்த ஆண்டு நோன்புப் பெருநாள் மற்றும் தேசிய தினத்திற்கு முன்னர் வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த உதவித் திட்டத்தின் மூலம் நடுத்தர வருமானம் பெறும் M40 பிரிவினர் உட்பட சுமார் 1.3 கோடி மலேசியர்கள் பயனடைவார்கள்.
அதேவேளை, STR ரொக்க உதவியைப் பெறும் குடும்பங்கள் மற்றும் பயனாளிகளுக்கு சாரா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அதிகபட்சமாக 150 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட் வரை உதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 90 லட்சம் பயனாளிகள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







