கோலாலம்பூர், அக். 9 – மலேசியாவில் தற்போது 1,700 ரிங்கிட்டாக உள்ள குறைந்தபட்ச மாத ஊதியம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாடு முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
இருப்பினும், ஆண்டு விற்பனை வருவாய் 5 கோடி ரிங்கிட்டிற்கும் குறைவாகக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த ஊதிய உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும், பகுதி திறன் பெற்ற ஊழியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான குறைந்தபட்ச 2,500 ரிங்கிட் மாத சம்பளத்தை வழங்கும் முறையையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அம – பிரதமர் அன்வார் அறிவிப்பு







