பெட்டாலிங் ஜெயா, அக். 9 – மத்திய அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு மொத்தம் 459.84 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 419.2 பில்லியன் ரிங்கிட்டை விட சுமார் 40 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.
மொத்த ஒதுக்கீட்டில் 376.8 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 82 விழுக்காடாகும்.
2026ஆம் ஆண்டில் நிர்வாகச் செலவுகளுக்காக 338.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 38.6 பில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ளது.
மேலும், மேம்பாட்டுச் செலவுகளுக்காக 2027ஆம் ஆண்டில் 83 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 81 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் 2 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.
இதனிடையே, 2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் 4.7 விழுக்காடு அதிகரித்து 380.8 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







