பட்ஜெட் 2027: டீசல் செலவுக்காக மாதந்தோறும் கூடுதலாக 20 லட்சம் ரிங்கிட் நிதி கோரும் KDEBWM

9 அக்டோபர் 2026, 3:30 AM
பட்ஜெட் 2027: டீசல்  செலவுக்காக மாதந்தோறும் கூடுதலாக 20 லட்சம் ரிங்கிட் நிதி கோரும் KDEBWM
பட்ஜெட் 2027: டீசல்  செலவுக்காக மாதந்தோறும் கூடுதலாக 20 லட்சம் ரிங்கிட் நிதி கோரும் KDEBWM

ஷா ஆலாம், அக்.9 – டீசல் விலை உயர்வால் அதிகரித்துள்ள செலவுகளைச் சமாளிக்க, 2027ஆம் ஆண்டு சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் KDEB கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு கூடுதலாக 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் விடுத்துள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பால் நிறுவனத்திற்கும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்கும் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுச் சுமையைக் குறைப்பதற்கு இந்த நிதி உதவி அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில், டீசல் விலை உயர்வின் காரணமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்காக மாதந்தோறும் ஏறக்குறைய 40 லட்சம் ரிங்கிட் கூடுதல் செலவினத்தை ஏற்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீடு கிடைத்தால், மாநிலம் முழுவதும் குப்பை சேகரிப்புச் சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், சிலாங்கூரின் தூய்மையைப் பேண முடியும் என்றும் ரம்லி கூறினார்.

கூடுதல் நிதி தொடர்பாக மாநில அரசாங்கத்துடன் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்குமாறு தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையில், KDEBWM நிறுவனத்திடம் உள்ள 800 ரோல்-ஆன், ரோல்-ஆஃப் (RORO) வகை குப்பை லாரிகளுக்கு டீசல் மானியம் கிடைப்பதில்லை என்றும் ரம்லி தெரிவித்தார். இதுவும் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சிலாங்கூரில் மொத்தம் 275 பாரம்பரியக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும் திடக்கழிவு சேகரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் 1 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.