லாரிகளின் டீசல் செலவைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்ட் அறிமுகம்: KDEBWM

30 செப்டெம்பர் 2026, 6:35 AM
லாரிகளின் டீசல் செலவைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்ட் அறிமுகம்: KDEBWM

ஷா ஆலாம், செப்.30 — 'கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் '(KDEB Waste Management ) நிறுவனம், தனது ஒப்பந்ததாரர்களின் குப்பை லாரிகளில் பயன்படுத்தப்படும் டீசல் அளவைக் கண்காணிப்பதற்காக ஸ்மார்ட் கார்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினசரி எரிபொருள் செலவு கிட்டத்தட்ட RM60,000 வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Caltex StarCard முறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு லாரியின் டீசல் நிரப்பப்படும் இடம், நேரம் மற்றும் அளவு ஆகியவற்றை நிறுவனம் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்றார் KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர்.

முன்னதாக ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்பட்ட நிலையில், நிரப்பப்பட வேண்டிய முழு அளவு டீசல் நிரப்பப்படாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அதனால், நிறுவனத்துக்கு இழப்பு மற்றும் எரிபொருள் கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற KDEB Waste Management மற்றும் Caltex Malaysia இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 500 குப்பை லாரிகள் தினசரி 10,000 லிட்டர் வரை டீசலைப் பயன்படுத்துகின்றன. ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை RM5.43 எனக் கணக்கிடப்படும் நிலையில், இதற்கான தினசரி செலவு கிட்டத்தட்ட RM60,000 ஆகிறது.

ஒவ்வொரு லாரியும் குப்பை சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக தினசரி சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை பயணிப்பதுடன், சேகரிக்கப்பட்ட குப்பைகள் பின்னர் குப்பை தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சிலாங்கூர் முழுவதும் உள்ள 92 Caltex நிலையங்களில் பயன்படுத்துவதற்காக 452 துணை ஒப்பந்ததாரர்களுக்கு இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரம்லி தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.