ஷா ஆலாம், அக் 8 : இன்று காலை சிலாங்கூரில் ஜோஹான் செத்தியாவில் மிக உயர்ந்த காற்று மாசடைவு குறியீடு (178 ) பதிவானது.
இதனைத் தொடர்ந்து ஷா ஆலம் (169), பந்திங் (167), பெட்டாலிங் ஜெயா (165), கிள்ளான் (164) மற்றும் கோலா சிலாங்கூர் (156) ஆகிய பகுதிகள் பதிவாகின.
இந்த பதிவுகளின்படி, காலை 7 மணி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள அனைத்து ஆறு கண்காணிப்புப் பகுதிகளும் ஆரோக்கியமற்ற கட்டத்தில் உள்ளன.
மலேசிய காற்று மாசடைவு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) படி, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பிற பகுதிகளும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தைப் பதிவு செய்தன.
அவை புத்ராஜெயா (174), பத்து மூடா (173) மற்றும் செராஸ் (167) ஆகும்.
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் மொத்தம் 38 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசடைவு குறியீட்டைப் பதிவு செய்த அதே வேளை, மற்ற 30 பகுதிகள் மிதமான அளவில் உள்ளன.
காற்றின் தரம் மோசமடைந்தால் பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







