சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணத்திற்கு RM10 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடு

7 அக்டோபர் 2026, 1:13 PM
சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணத்திற்கு RM10 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடு
சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணத்திற்கு RM10 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 7 : சிலாங்கூர் மாநில அரசாங்கம் இவ்வாண்டு பி40 (B40) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக, தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளின் (SJKT) பள்ளிப் பேருந்து கட்டண மானிய உதவிக்காக 10 லட்சத்து 35ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 3,452 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு RM300 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு தெரிவித்தார்.

மாணவர்களுக்கு, குறிப்பாக பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்துத் தேவைகளுக்குச் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து உதவி வழங்கி வருவதாக அவர் விளக்கினார்.

"இந்த உதவி பெற்றோர்களின் நிதிச்சுமையைக் குறைப்பதோடு, பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்பதை ஊக்குவிக்கவும், அவர்கள் கல்வியில் இருந்து பின் தங்கிவிடாமல் இருக்கவும் உதவும் என நம்புகிறோம்.

பிள்ளைகளின் நலனும் கல்வியும் சிலாங்கூர் அரசின் முதன்மையான முன்னுரிமையாகும்," என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதிலும் உள்ள 98 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 3,447 மாணவர்கள் 10 லட்சத்து 34 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் பள்ளிப் பேருந்து கட்டண உதவியைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.