சீன,தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி உதவி: அடுத்த 2 வாரங்களில் பிரதமர் அறிவிப்பு!

8 ஆகஸ்ட் 2026, 2:17 AM
சீன,தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி உதவி: அடுத்த 2 வாரங்களில் பிரதமர்  அறிவிப்பு!

அலோர் காஜா, ஆகஸ்ட் 8: சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட உள்ளதுடன், அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க உதவி அடுத்த இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படுமென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு கல்வி நீரோட்டமும் தகுதியான அங்கீகாரத்தையும் கவனத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த அறிவிப்பு ஒரு தனி நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்று பிரதமர் கூறினார் .

இஸ்லாமியப் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி கூடங்களுக்கும் உதவிகளை நியாயமான முறையில் வழங்குவதில் மடாணி (Madani) அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார் .

"ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்குத் தகுதியான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், உதவிகள் சீரான மற்றும் சமமான முறையில் விநியோகிக்கப்படுகின்றன .

முன்னர் குறைந்த கவனத்தைப் பெற்ற பொண்டோக் பள்ளிகள் (pondok schools), தஹ்ஃபிஸ் மையங்கள் , மற்றும் மக்கள் சமயப் பள்ளிகள் (Sekolah Agama Rakyat) உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி கூடங்களுக்கான ஆதரவை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அன்வார் கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இங்குள்ள மஸ்ஜித் தானா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற "கெலம்பாங் மடாணி" (Gelombang Madani) விழாவில் உரையாற்றும்போது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.