நாட்டில் எந்தவொரு தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது : கல்வியமைச்சு உறுதி

6 செப்டெம்பர் 2026, 6:39 AM
நாட்டில் எந்தவொரு தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது : கல்வியமைச்சு உறுதி
நாட்டில் எந்தவொரு தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது : கல்வியமைச்சு உறுதி

நிபோங் திபால், செப் 6: நாட்டிலுள்ள எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

மாறாக, அப்பள்ளிகளின் மேம்பாடு,பராமரிப்பு மற்றும் ஆசிரியர், மாணவர் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் தமிழிப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக்

தமிழ்ப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற தவறான கருத்து இன்னும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால், இந்த உறுதிமொழி மிகவும் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற சுங்கை பாகாப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத் திட்டத்திற்கான 'ஒப்புதல் கடிதம்' வழங்கும் விழாவிலும், அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

12.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்தத் திட்டம் 'யாயாசான் டிடிக் நெகாரா' (YDN) அமைப்பினால் 56 வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும், இதன் அமலாக்கத்தை பினாங்கு மாநில கல்வி வாரியம் (JPN) கண்காணிக்கும் என்றும் கல்வியமைச்சர் கூறினார்.

சுங்கை பாகாப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்தை சாத்தியமாக்குவதில் பங்களித்த சமூகம், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பழைய பள்ளி கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், இந்த புதிய கட்டுமானத் திட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.