காற்று மிக மோசமாக மாசடைந்த உலக நகரங்களின் பட்டியலில் கோலாலம்பூர் முதலிடம்

7 அக்டோபர் 2026, 9:23 AM
காற்று மிக மோசமாக மாசடைந்த உலக நகரங்களின் பட்டியலில் கோலாலம்பூர் முதலிடம்

கோலாலம்பூர், அக் 7: இன்று நாட்டின் தலைநகரான கோலாலம்பூர், ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, உலக அளவில் காற்று மிக மோசமாக மாசடைந்த முக்கிய நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'IQAir' என்ற காற்றின் தரத் தொழில்நுட்ப நிறுவனம் நேரடியாக வெளியிடும் 'உலக காற்றுத் தர வரிசை' (World Air Quality Ranking) தரவுகளின்படி, கோலாலம்பூர் இன்று நண்பகல் நிலவரப்படி 199 புள்ளிகள் என்ற காற்றுத் தரக் குறியீட்டைப் பதிவு செய்தது.

198 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள சிங்கப்பூரையும், 180 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் வங்காளதேசம் டாக்கா (Dhaka) நகரும் உள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் (Lahore) 171 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இந்தியாவின் மும்பை 167 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் மேலும் இரு நகரங்களான புது டில்லி (165 AQI) மற்றும் கல்கத்தா (164 AQI) ஆகியவையும் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் 159 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ள வேளையில், சரவாக்கின் கூச்சிங் (Kuching) நகரம் 151 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டடது.

சவுதி அரேபியாவின் ரியாத் (Riyadh) நகரம் 151 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் கலிமந்தான் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, மலேசியா கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசடைவுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

ஜொகூரில் உள்ள பத்து பஹாட் (Batu Pahat) பகுதியில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி IPU அளவு 203 ஆகப் பதிவானதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்துப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் (tadika) மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் (taska) இன்று மூடப்பட்டடன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.