ஷா ஆலாம், அக் 10 - நவம்பர் 14-ஆம் தேதி, மலாக்க மாநில வாக்களிப்புத் தினமாக, தேர்தல் ஆணையம் முடிவுச் செய்துள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி வேட்பாளர் நியமன நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவ்வாணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.
நவம்பர் 10-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு தினமாக முடிவாகியுள்ளது.
அக்டோபர் 31- ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னர், நவம்பர் 13-ஆம் தேதி நள்ளிரவு மணி 11.59 வரை தேர்தல் பரப்புரைக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று மலாக்காவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்திற்குப் பின்னர், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான இந்த முக்கியத் தேதிகளை ரம்லான் அறிவித்தார்.
செப்டம்பர் 23 -ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
மலாக்கா சட்டமன்றம் 28 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இம்மாநிலத்தின் கடந்த சட்டமன்றத் தேர்தலில், தேசிய முன்னணி 21 இடங்களில் வெற்றிப் பெற்றது. ஹரப்பான் ஐந்து இடங்களிலும். பெரிக்காத்தான் கூட்டணி இரு இடங்களிலும் வென்றன.





