வாகன நிறுத்துமிட அபராதங்களுக்கு அக்டோபரில் RM20 சிறப்புச் சலுகை: ஷா ஆலாம் மாநகராட்சி

6 அக்டோபர் 2026, 12:45 PM
வாகன நிறுத்துமிட அபராதங்களுக்கு அக்டோபரில் RM20 சிறப்புச் சலுகை: ஷா ஆலாம் மாநகராட்சி

ஷா ஆலாம், அக். 6 — ஷா ஆலாம் மாநகராட்சி (எம்.பி.எஸ்.ஏ.) தனது 26ஆவது நகர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் மாதம் முழுவதும் வாகன நிறுத்துமிட அபராதங்களுக்கான RM20 சிறப்புக் கட்டணச் சலுகையை அமல்படுத்தியுள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை இந்தச் சிறப்புப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுளது.

சில குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களில் அசல் கட்டணத்திலிருந்து 65 விழுக்காடு வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுவதாக எம்.பி.எஸ்.ஏ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது அபராதங்களை ஷா ஆலாம் சேவை நுழைவாயில், விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. வாகன சேவை கவுன்டர், சுங்கை பூலோ கிளை அலுவலகம், கோத்தா கெமுனிங் கிளை அலுவலகம் மற்றும் செத்தியா ஆலம் கிளை அலுவலகம் ஆகிய இடங்களில் செலுத்தலாம்.

வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதங்களை JomPAY மூலமாகவும் செலுத்தலாம். இதற்கு 6726 என்ற biller code-ஐப் பயன்படுத்துவதுடன், Ref1 பகுதியில் அபராத எண்ணையும், Ref2 பகுதியில் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், Flexi Parking செயலியில் உள்ள ‘Scan N Pay Compound’ வசதி, Maybank2U மற்றும் Bank Muamalat கவுன்டர்கள் மூலமாகவும் வாகன நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்த முடியும்.

பொதுமக்கள் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள அபராதங்களை விரைவில் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், எம்.பி.எஸ்.ஏ. கவுன்டர்களில் சில பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான தடைகள் விதிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் எதிர்கொள்ள நேரிடும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.