19 வயது மாணவி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழப்பு; காதலனுக்கு தடுப்பு காவல்

6 அக்டோபர் 2026, 9:30 AM
19 வயது மாணவி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழப்பு; காதலனுக்கு தடுப்பு காவல்

குவாந்தான், அக்.6 — ஆயர் புத்தே பகுதியில் உள்ள வீடொன்றில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் 19 வயது மாணவி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நேரத்தில் சந்தேக நபர் வீட்டில் இருந்ததாகவும், காவல்துறையினர் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4.32 மணியளவில் சந்தேக நபரே காவல்துறைக்கு அழைப்பு விடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, வீட்டில் உள்ள படுக்கையில் அம்மாணவி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

அவரது கழுத்துப் பகுதியில் அழுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாகவும் அஷாரி கூறினார்.

முதற்கட்ட விசாரணைகயில் சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சந்தேக நபருக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதனுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அஷாரி தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.