ECRL ரயில் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை தொடக்கம்

6 அக்டோபர் 2026, 8:52 AM
ECRL ரயில் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை தொடக்கம்

கோலாலம்பூர், அக். 6 — கிழக்குக் கரை ரயில் இணைப்பான ECRL-இன் பயணக் கட்டணங்களைப் போக்குவரத்து அமைச்சு இம்மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Malaysia Rail Link Sdn Bhd, (MRL) தெரிவித்துள்ளது.

ECRL சேவைக்கான டிக்கெட் விற்பனை நவம்பர் மாதம் தொடங்கும் என்றும், வணிக ரீதியான பயணிகள் சேவை டிசம்பர் மாதத்தின் மத்தியில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதனை MRL தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

ECRL-க்கான கட்டணங்கள் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடும் முறையைக் கொண்டிருக்கும். அவை விமானக் கட்டணத்தைவிட குறைவாகவும், பேருந்துக் கட்டணத்தைவிட சற்று அதிகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட சேவையில், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் 12 இருவழிப் பயணங்களும், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் 14 இருவழிப் பயணங்களும் இயக்கப்படும் என்று டார்விஸ் குறிப்பிட்டார்.

ECRL திட்டத்தின் முதல் கட்டமான கோத்தா பாரு முதல் கோம்பாக் வரையிலான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், 98.16 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ECRL முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான பயண நேரம் சுமார் நான்கு மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சாலை வழியாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள சுமார் ஏழு மணி நேரம் ஆகும் நிலையில், ECRL சேவை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.