ரந்தாவ் பஞ்சாங் வரையில் ECRL ரயில் இணைப்பை நீட்டிக்க மலேசியா -சீனா இணக்கம்

24 செப்டெம்பர் 2026, 1:19 PM
ரந்தாவ் பஞ்சாங் வரையில் ECRL ரயில் இணைப்பை நீட்டிக்க மலேசியா -சீனா இணக்கம்
ரந்தாவ் பஞ்சாங் வரையில் ECRL ரயில் இணைப்பை நீட்டிக்க மலேசியா -சீனா இணக்கம்

ஹங்சாவ், செப் 24 - கிளந்தான் கோத்தா பாருவில் இருந்து ரந்தாவ் பஞ்சாங் வரைக்கும் கிழக்கு கரை ரயில் இணைப்பை (ECRL ) நீட்டிக்கும் பரிந்துரைக்கு மலேசியாவும் சீனாவும் இணக்கம் கண்டன.

இந்த ரயில் திட்ட விரிவாக்கம் கிளந்தானின் உட்புறப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். அதோடு தாய்லாந்துடன் நேரடி போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்துமென , பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த ரயில் திட்ட விரிவாக்கம் குறித்து அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுமென அவர் கூறினார்.

சீனாவுக்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தின் இறுதியில் நிதியமைச்சருமான அன்வார் மலேசிய செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கோத்தா பாருவில் தொடங்கி கிள்ளான் துறைமுகம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை இரயில் இணைப்புத் (ECRL) திட்டம், 10 பயணிகள் நிலையங்கள் மற்றும் சரக்கு-பயணிகள் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் 10 நிலையங்கள் உட்பட மொத்தம் 20 நிலையங்களை இணைக்கும்.

இதனிடையே, சீனப் பிரதமர் லி கியாங்குடன் இன்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக அன்வார் கூறினார்.

அச்சந்திப்பின் போது இரு நாடுகளும் ஆசியான் வட்டாரம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேசியதோடு, தற்போது வாஷிங்டன் டிசிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் குறித்த தகவல்களும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.