இவ்வாண்டு டிசம்பர் மத்தியிலே கிழக்கு கரை ரயில் சேவையைத் தொடங்க இலக்கு

18 செப்டெம்பர் 2026, 11:31 AM
இவ்வாண்டு டிசம்பர் மத்தியிலே கிழக்கு கரை ரயில் சேவையைத் தொடங்க  இலக்கு

கோலாலம்பூர், செப் 18 - ECRL கிழக்குக் கரை ரயில் சேவையை இவ்வாண்டு டிசம்பர் மத்தியிலேயே தொடங்க மலேசிய ரேயில் லிங் (Malaysia Rail Link Sdn Bhd) நிறுவனம் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

ரயில் பயணத்தின் பாதுகாப்புப் பரிசோதனை சுமூகமாக நடைபெற்றதை அடுத்து, தங்களுக்கு அந்த நம்பிக்கை கிடைத்திருப்பதாக, மலேசிய ரேயில் லிங் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்ரீ டர்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

2027 ஜனவரியைக் காட்டிலும் , கிழக்கு கரை ரயில் சேவையைப், பொது மக்கள் முன்கூட்டியே பெறுவதற்கு வகை செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதையடுத்து, ரயில் பாதுகாப்புப் பரிசோதனை நல்ல முடிவைத் தந்திருப்பதை அடுத்து, சேவையை முன்கூட்டியே தொடங்குவதற்கான நம்பிக்கை தங்களுக்கு கிடைத்திருப்பதாக டத்தோ ஸ்ரீ டர்விஸ் தெரிவித்தார்.

ரயில் பயணம் நெடுகே எதாவது பிரச்சனை நடைபெறுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக, கடந்த மாதம் குவந்தானிலிருந்து கோத்தா பாருவிற்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக கோம்பாக்கில் இருந்து குவந்தான் துறைமுக நகருக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

அதையடுத்து, கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையில் ரயில், முழு தூர சோதனை பயணத்தை மேற்கொள்ளும். பின்னர் அக்டோபரில் குறைபாடற்ற சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தில் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். கோம்பாக்கில் இருந்து குவந்தான் துறைமுக நகர் வரைக்குமான பயணம் 90 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் 16.39 கிலோமீட்டர் தூரம் பயணித்த அந்த ரயில் கெந்திங் சுரங்கத்தைக் கடந்துச் சென்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.