சிசிடிவி காட்சிகள் வைரலானதால் திருடப்பட்ட ஹாம்ஸ்டர் மீண்டும் ஒப்படைப்பு

6 அக்டோபர் 2026, 7:58 AM
சிசிடிவி காட்சிகள் வைரலானதால் திருடப்பட்ட ஹாம்ஸ்டர் மீண்டும் ஒப்படைப்பு

கோலாலம்பூர், அக். 6 — ஜோகூர், பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு செல்லப்பிராணிக் கடையிலிருந்து ஹாம்ஸ்டரை (வெள்ளெலி) திருடிய சிசிடிவி காட்சிகள் வைரலானதால், சம்பந்தப்பட்ட நபர் அதை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அந்த ஹாம்ஸ்டர் கடைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்நபர் கடைக்குள் சென்று ஊழியர்களிடமோ கடை உரிமையாளரிடமோ எதுவும் தெரிவிக்காமல், ஹாம்ஸ்டரை ஒரு கூண்டுக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அந்த ஹாம்ஸ்டர் மீண்டும் கடைக்குக் கொண்டு வரப்பட்டதை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அறிந்துகொண்டதாகக் கடைப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்தக் காட்சிகளில், குடும்பத்துடன் அக்கடைக்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த ஹாம்ஸ்டரை எடுத்துக்கொண்டு, தனது தோளில் அணிந்திருந்த பைக்குள் வைப்பது பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் அந்நபர் ஒரு வாரத்திற்குள் ஹாம்ஸ்டரை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தனது செயல் தவறானது என்பதை அந்நபர் ஒப்புக்கொண்டதுடன், கடை உரிமையாளரிடம் மன்னிப்பும் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது செயல்கள் பதிவாகக்கூடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.