காஜாங், டிச 5- காஜாங்கில் வேகமாக வந்த கார் ஒன்று பள்ளி மாணவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவரும் காயங்களுக்கு இலக்கானதான டிக் டாக் காணொளி மூலம் தெரிய வந்தது.
பள்ளி முடிந்து இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய கார் பிறகு அங்கிருந்து வேகமாக தப்பித்ததாகவும் தெரிய வருகிறது.
இந்த சம்பவம் அடங்கிய டிக் டாக் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. காஜாங்கில் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இரு மாணவர்களையும் இடித்து தள்ளிய காரை சக மாணவர்கள் சூழ்ந்துக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.


