ஷா ஆலாம், அக். 6 — சிலாங்கூரில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளது. பிற்பகல் ஒரு மணியளவில் மாநிலத்தின் நான்கு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு, API ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
ஜோஹான் செத்தியாவில் அதிகபட்சமாக 154 என்ற API அளவு பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஷா ஆலாம் 151, பெட்டாலிங் ஜெயா 141 மற்றும் பந்திங் 130 என்ற அளவில் API பதிவாகின
இதனிடையே, சிலாங்கூரில் மேலும் இரண்டு கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளது. அவை கிள்ளானில் 97, கோலா சிலாங்கூரில் 69 அளவாகும்.
இதற்கிடையில் நாடு முழுவதும் மொத்தம் 27 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது. அவற்றில் அதிகபட்சமான ஐந்து பகுதிகள் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவையாகும்.
மேலும், 35 பகுதிகளில் மிதமான காற்றுத் தரமும், ஆறு பகுதிகளில் நல்ல காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.






