பகடிவதை சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக்கூடாது – பிரதமர்

6 அக்டோபர் 2026, 5:45 AM
பகடிவதை சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக்கூடாது – பிரதமர்

கோலாலம்பூர், அக். 6 — பள்ளிகளின் நற்பெயர் பாதிக்கப்படும் ஏற்பதற்காகப் பகடிவதை சம்பவங்களை பள்ளி நிர்வாகங்கள் மறைக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

சில பள்ளிகள் தங்களது நற்பெயர் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், இதுபோன்ற சம்பவங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருக்கின்றன.

எந்த வகையான பகடிவதை சம்பவமாக இருந்தாலும், மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகள் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இச்சம்பவங்களை மறைப்பதன் மூலம் பாதிக்கப்படுவது மாணவர்களே ஆவர்; இதுபோன்ற அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் அன்வார்.

நாட்டின் பல மாநிலங்களில் மாணவர்களின் மரணம், கடுமையான காயங்கள், தற்கொலை முயற்சிகள், பகடிவதை சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது கவலைக்குரியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கிளந்தான், சபா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், PTA ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொத்தம் 5,681 பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்களில் உடல் ரீதியான துன்புறுத்தல், வாய்மொழித் துன்புறுத்தல், வாய்மொழியற்ற துன்புறுத்தல் மற்றும் இணையவழித் துன்புறுத்தல் ஆகியவை அடங்குவதாக அவர் கூறினார்.

அதேவேளை, அதிகாரப்பூர்வமாகப் பதிவாகாத சம்பவங்கள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.